Home Featured நாடு ஷரியா திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சபா, சரவாக் ‘தனிவழியில்’ செல்லும் – குரூப் எச்சரிக்கை!

ஷரியா திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சபா, சரவாக் ‘தனிவழியில்’ செல்லும் – குரூப் எச்சரிக்கை!

709
0
SHARE
Ad

JosephKurupகோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் ஷரியா நீதிமன்றம் (Criminal Jurisdiction) சட்டம் 1965-ல் கொண்டு வரப்படும் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தீபகற்ப மலேசியாவில் இருந்து சபா, சரவாக்கை பிரித்துக் கொள்ள அம்மாநில மக்கள் கோரிக்கை விடுவார்கள் என சபா ஒற்றுமை மக்கள் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ ஜோசெப் குரூப் புத்ராஜெயாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மற்றும் மேற்கு மலேசியாவிடையே பிரிவினையை ஏற்படுத்தும் அந்த மசோதா தாக்கல் செய்யப்படக் கூடாது என்பதால் தான் அதை திரும்பப் பெற வலியுறுத்துவதாகவும், பிரதமர் துறை அமைச்சருமான குரூப் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் அது (மசோதா) வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டால், சபா, சரவாக் மக்கள் தனியாகப் பிரிந்து செல்லும் உணர்வுக்குத் தள்ளப்படுவார்கள் என நான் அஞ்சுகிறேன்”

#TamilSchoolmychoice

“அவர்களுக்கு (மத்திய அரசாங்கம்) இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது” என்று ஸ்டாருக்கு அளித்த தகவலில் குரூப் தெரிவித்துள்ளார்.