Home Featured இந்தியா நாக்பூரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 20 ராணுவ வீரர்கள் பலி – மோடி, சோனியா...

நாக்பூரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 20 ராணுவ வீரர்கள் பலி – மோடி, சோனியா இரங்கல்!

676
0
SHARE
Ad

mahrastra_fire_fbநாக்பூர் – நாக்பூர் அருகே புல்கானில் மத்திய அரசுக்கு சொந்தமான  வெடி மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கிடங்குகளில் ஒன்றான இந்த வெடி மருந்து கிடங்கில்  நேற்று  நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்ட   திடீர் தீ விபத்தில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் 2 அதிகாரிகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்.

19 பேர் படுகாயம்டைந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

mahrastra_fireவெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. வெடி மருந்து கிடங்கு அமைந்துள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

நாக்பூர் தீவிபத்தில் பலியான 20 இராணுவ வீரர்கள் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கருக்கு உத்தரவிட்டுள்ள அவர், வீரர்கள் பலியான சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

sonia-modiஅதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பலியான  இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோர் நாக்பூர் விரைந்துள்ளனர்.