சென்னை – கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு படம் தமிழ்நாடு முழுவதும் 35 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
3 வருடப் போராட்டங்களுக்குப் பின் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வசூல் ரீதியாக இது நம்ம ஆளுவுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம். பெரிய படங்கள் வெளியாகாதது, பாண்டிராஜின் இயக்கம், அதிக திரையரங்குகள் ஆகியவையும் இப்படத்திற்கு கைகொடுத்துள்ளன.
முதல் வாரத்தில் இப்படம் சென்னையில் மட்டும் 5.18 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இதுவரை சிம்புவின் எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர தமிழ்நாடு முழுவதும் இப்படம் முதல் வாரத்தில் 35 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. இப்படத்தை வாங்கி வெளியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அரண்மனை 2 படத்திற்குப் பின் இது நம்ம ஆளு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.