Home Featured இந்தியா கங்கை நதி நீரை இணையம் வழியாக விற்க இந்திய அரசு முடிவு!

கங்கை நதி நீரை இணையம் வழியாக விற்க இந்திய அரசு முடிவு!

831
0
SHARE
Ad

varanasiபுதுடெல்லி – இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் கங்கை நதியின் தண்ணீரை பாக்கெட்டுகளில் அடைத்து, நாடெங்கிலும் இணையம் மூலமாக விற்பனை செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டு வருகின்றது.

இந்திய பாரம்பரியத்தைப் பொறுத்தவரையில், கங்கையின் நீர் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டு வருகின்றது. உலகிலேயே அசுத்தமான நதியாகவும் பட்டியலிடப்பட்டுள்ள கங்கையில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பேர் குளித்து தங்களது பாவங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக நம்புகின்றனர்.

இது குறித்து கடந்த திங்கட்கிழமை இந்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹரிதுவார் மற்றும் ரிஷிகேசில் இருந்து புனிதமான கங்கை நீரை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான இணைய வர்த்தகத்திற்கான தளம் ஒன்றை அமைக்க எனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில், கங்கை நதியும் முக்கிய அங்கம் வகித்தது. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

“கங்கை நீருக்கு மிகப் பெரிய தேவை இருக்கின்றது. செல்பேசிகள், புடவைகள், நகைகள், ஆடைகள் உள்ளிட்டவைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் போது, கங்கை நீரை ஏன் அனுப்பக் கூடாது?” என்று அமைச்சர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.