Home Featured நாடு சாஹிட் மருமகன் திடீர் மரணம் குறித்து விசாரணை – சுப்ரா தகவல்!

சாஹிட் மருமகன் திடீர் மரணம் குறித்து விசாரணை – சுப்ரா தகவல்!

602
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் சைட் அல்மான் சைட் அல்வியின் (வயது 44) திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்துவோம் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு பங்சாரில் பல்மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சென்ற அவர், திடீரென இறந்தார்.

இது குறித்து சுப்ரா கூறுகையில், “என்ன நடந்தது என்று விசாரணை செய்வோம். வழக்கத்திற்கு மாறாகவோ அல்லது நிபுணத்துவம் இன்றியோ கையாளப்பட்டிருந்தால், நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்றும் பல்மருத்துவத்திலும் சட்டங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இறந்த சைட் அல்மான் சாஹிட் ஹமீடியின் மூத்த மகள் நூருல்ஹிடாயா(வயது 37) மணம் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.