Home Featured நாடு கெடா மந்திரி பெசார் உடல் நிலை சீராக உள்ளது!

கெடா மந்திரி பெசார் உடல் நிலை சீராக உள்ளது!

891
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கூட்டம் ஒன்றின்போது மயங்கி விழுந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாட்ஷா முகமட் ஹானிபாவின் (படம்) உடல் நிலை தற்போது சீராக இருந்து வருவதாக, நேற்று சனிக்கிழமை இரவு அவரைச் சந்தித்து விட்டு வந்த கெடா பெலாந்திக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் தாஜூடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ahmad-bashah-kedah MB“அவர் களைப்படைந்திருக்கின்றார் என்றாலும், சுய நினைவோடு இருக்கிறார்” என்றும் தாஜூடின் கூறியிருக்கின்றார்.

கெடா மந்திரி பெசார் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், ஒரு சில தகவல் ஊடகங்களில் வெளிவந்ததைத் போன்று அகமட் பாட்ஷா மயக்கமடைந்து கீழே விழவில்லை என்றும் அவருக்கு வெறும் தலைசுற்றல், இலேசான மயக்கம்தான் ஏற்பட்டது என்றும், மருத்துவமனையில் அவரைச் சந்தித்த கெடா மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ சாம்ரி யாஹ்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் கெடா மந்திரிபெசாரின் அரசியல் செயலாளர் டத்தோ சாய்ஃபுல் அசிசி ஜைனால் அபிடின் “அவர் பலவீனமாக இருக்கின்றார். இருந்தாலும் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்குத் தற்போது நல்ல ஓய்வு தேவைப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.