Home Featured நாடு இன்று சுங்கை பெசார் – கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்!

இன்று சுங்கை பெசார் – கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல்!

782
0
SHARE
Ad

voting-ballot-box-கோலாலம்பூர் – நாட்டின் அடுத்த கட்ட அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறுகின்றது.

சுங்கை பெசார்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும் தோட்டத் துறை, மூலத் தொழில் துணை அமைச்சருமான நோரியா காஸ்னோன் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, இங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலகங்சார்

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரில் அனுவார் வான் அகமட்  மரணமடைந்ததைத் தொடர்ந்து இங்கு நடைபெறும் இடைத் தேர்தலிலும் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும், தேசிய முன்னணி, பாஸ் கட்சிகளோடு, எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹாராப்பானும் போட்டியிடுகின்றது.

பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் இரண்டு தொகுதிகளிலும், பார்ட்டி அமானா நெகாரா தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மறைந்த கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் வான் முகமட் கைரிலின் மனைவி தேசிய முன்னணி வேட்பாளராக இங்கு போட்டியிடுகின்றார். அவர் கணவர் மறைவால் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதால், இங்கு தேசிய முன்னணி தரப்பில் குழப்பம் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.