Home Featured நாடு சுங்கை பெசார் : சொற்ப வாக்குகள்தான் என்றாலும் இந்தியர்கள் வெற்றியை நிர்ணயிக்கலாம்!

சுங்கை பெசார் : சொற்ப வாக்குகள்தான் என்றாலும் இந்தியர்கள் வெற்றியை நிர்ணயிக்கலாம்!

572
0
SHARE
Ad

செகிஞ்சான் – நேற்று காலை நடைபெற்ற சுங்கை பெசார் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு மிகக் குறைந்த அளவே இருக்கும் இந்திய வாக்குகள் அந்தத் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கலாம்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற நோரியா காஸ்னோன் 399 வாக்குகள் வித்தியாசத்தில்தான் இங்கு வெற்றி பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sg Besar by-election-Zahid Hamidi-sakthivelநேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியுடன் சிலாங்கூர் மாநிலப் பொறுப்பாளர்கள் இரவிச்சந்திரன், பார்த்திபன் மற்றும் தலைமைச் செயலாளர் சக்திவேல்…

#TamilSchoolmychoice

சுங்கை பெசாரில் மொத்தமுள்ள 42,836 வாக்காளர்களில் சுமார் 2 சதவீதத்தினர் மட்டுமே இந்திய வாக்காளர்கள் – அதாவது சுமார் 800 வாக்காளர்கள். இந்த வாக்குகளைக் கவர மஇகா உள்ளிட்ட தேசிய முன்னணிக் கட்சிகள் குறிவைத்துப் பணியாற்றி வருகின்றன.

நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது திரளான மஇகா தலைவர்கள் கலந்து கொண்டதோடு, அதன் பின்னர் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர்.

இந்தியர்களும், சீனர்களும் சுங்கை பெசார் இடைத் தேர்தலில் உணர்ச்சி வேகத்துக்கு இடமளிக்காமல், தேசிய முன்னணியின் சேவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டுமென வேட்புமனுத் தாக்கலுக்குத் தலைமையேற்ற துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.

30.68 சதவீத சீன வாக்காளர்களும், 67.18 சதவீத மலாய் வாக்காளர்களும் இங்குள்ளனர்.

Sungei Besar by election-MIC

நேற்று நடைபெற்ற சுங்கை பெசார் வேட்புமனுத்தாக்கலின்போது அம்னோ-தேசிய முன்னணி தலைமைச் செயலாளரான தெங்கு அட்னானுடன் மஇகா தலைமைச் செயலாளர் சக்திவேல், மஇகா சிலாங்கூர் மாநிலப் பொறுப்பாளர்கள் பார்த்திபன், இரவிச்சந்திரன் …

நேற்று சுங்கை பெசாரில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து இன்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தனது பிரச்சாரத்தை இங்கு தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டாக்டர் சுப்ரா நேற்று கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் கலந்து கொண்டார்.

Sungei Besar By-election-MIC with candidate

சுங்கை பெசாரில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர் புடிமான் முகமட் சோடியுடன் மஇகா தலைவர்கள்…