ஜோகூர் – ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கு எதிராக அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவித்த இளைஞர் முகமட் அமிருல் அஸ்வான் மொகமட் ஷகாரிக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 வயதே நிரம்பிய அந்த இளைஞருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்ற நீதிபதி சபாரியா அதான் முன்னிலையில் நிரூபிக்கப்பட்டன.
கிளந்தான் தும்பாட்டைச் சேர்ந்த அந்த இளைஞர் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேஸ்புக்கில் இளவரசருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998, பிரிவு 233-ன் கீழ், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட் அபராதமோ அல்லது ஒரு வருட சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.
கூலித் தொழிலாளியான அந்த இளைஞர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர் என்றும், இது போன்ற குற்றங்களை மீண்டும் அவர் செய்ய மாட்டார் என்றும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
என்றாலும், துணை அரசு வழக்கறிஞர் நோர் அசிசா மொகமட், அவருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கியதோடு, அடுத்த ஜோகூர் சுல்தானாக ஆகப் போகும் துங்கு இஸ்மாயிலை அவ்வாறு கடுமையாக விமர்சித்தது குற்றம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.