Home Featured கலையுலகம் ‘மைந்தன்’ வசூல் சாதனையை ‘மயங்காதே’ முறியடிக்கும் – சிகே நம்பிக்கை!

‘மைந்தன்’ வசூல் சாதனையை ‘மயங்காதே’ முறியடிக்கும் – சிகே நம்பிக்கை!

676
0
SHARE
Ad

Mayangaathe 5கோலாலம்பூர் – ‘மைந்தன்’ படத்திற்கு மக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பினையடுத்து, சிகே குமரேசன், ஷைலா நாயர் கூட்டணி மீண்டும் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மயங்காதே’.

பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அத்தனை பேரையும் கவரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த இத்திரைப்படம் வரும் ஜூன் 9-ம் தேதி முதல் நாடெங்கிலும் வெளியீடு காண்கிறது.

இத்திரைப்படம் குறித்து நடிகர் சிகே கூறுகையில், “மயங்காதே வரும் வியாழக்கிழமை வெளியாகிறது. மலேசியா முழுவதும் உள்ள பெரும்பான்மையான திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு வழங்கி வரும் மகத்தான ஆதரவை இப்படத்திற்கு வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். சும்மா ஆதரவு மட்டும் கேட்கவில்லை. குடும்பத்தோடு திரையரங்கில் கலகலப்பாக சிரித்து ரசித்துப் பார்த்துவிட்டு வரும் படி ஒரு கமர்சியல் திரைப்படமாக எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் இப்படத்தில் உள்ளது.”

#TamilSchoolmychoice

“கண்டிப்பாக ஏமாற்றம் அடையமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காரணம் படத்தில் பாடல்கள், நடிகர்கள், அவர்களின் நடிப்பு, நகைச்சுவை என பல விசயங்களை படத்தில் கொண்டு வந்திருக்கிறேன்.”

“முதல் முறையாக மோட்டார் பந்தய காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இப்படியாகப் படத்தில் நீங்கள் ரசிக்கக் கூடிய அளவிற்கு எல்லா விசயங்களும் உள்ளது. அதனால் அனைவரும் திரையரங்கு சென்று இப்படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று சிகே கேட்டுக் கொண்டுள்ளார்.

நிச்சயம் இப்படம் தனது முந்தைய படமான ‘மைந்தனின்’ வசூல் சாதனையை முறியடிக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சிகே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கதாப்பாத்திரங்களின் தேர்வு

Mayangaathe 4படத்தில் நடித்துள்ள நடிகர்களைப் பொறுத்தவரையில் ஊடகம் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கேமரா முன் எந்த ஒரு கூச்சமும் இன்றி மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சிகே தெரிவித்துள்ளார்.

இந்தக் கதாப்பாத்திரத்தை இவர் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்பே கணித்த பிறகே அவர்களிடம் அக்கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டதாகவும் சிகே குறிப்பிட்டுள்ளார்.

‘மைந்தன்’ அடைந்த வசூல் சாதனையைக் கண்டிப்பாக முறியடிக்கும் அளவிற்கு ‘மயங்காதே’ திரைப்படத்தில் அத்தனை அம்சங்களும் நிறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘மயங்காதே’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், கதை நடக்கும் சூழல், இசை உள்ளிட்ட மேலும் பல சுவாரஸ்யமான விசயங்களைத் தெரிந்து கொள்ள இந்த http://www.selliyal.com/archives/123851 இணைப்பைப் பயன்படுத்தவும்.