Home Featured கலையுலகம் சிம்பு-கௌதம் மேனன் இணைப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ – முன்னோட்டம் – பத்து இலட்சம் பார்வையாளர்கள்!

சிம்பு-கௌதம் மேனன் இணைப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ – முன்னோட்டம் – பத்து இலட்சம் பார்வையாளர்கள்!

698
0
SHARE
Ad

Acham_Enbathu_Madamaiyada_Posterசென்னை – நடிகர் அஜித்குமார் நடிப்பில் என்னை அறிந்தால் வெற்றிப் படத்தை அளித்த கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படமான ‘அச்சம் என்பது மடமையடா’ பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

காரணம், இதே கூட்டணியில் கடந்த முறை உருவான விண்ணைத் தாண்டி வருவாயா வசூல் ரீதியாகவும், விமர்சனங்களிலும் இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

மீண்டும் கௌதம் மேனன்- சிம்பு கூட்டணியோடு ஏ.ஆர்.ரஹ்மானும் இணைவதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் இந்த மூவர் கூட்டணி இணைந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அச்சம் என்பது மடமையடா படத்தின் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு, குறுகிய காலத்திலேயே, 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூ டியூப் இணையத் தளத்தில் ஈர்த்துள்ளது.

அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூ டியூப் இணைப்பில் காணலாம்: