Home Featured கலையுலகம் தனது பாடல்களை இரசிக்க திரையரங்கம் வந்த ரஹ்மான்!

தனது பாடல்களை இரசிக்க திரையரங்கம் வந்த ரஹ்மான்!

822
0
SHARE
Ad

 

ar-rahman

சென்னை – தனது சொந்த இசைக் கோர்ப்பு அரங்கில் அமர்ந்து, மக்களால் வரவேற்கப்படும் அற்புதமான பாடல்களை உருவாக்கித் தந்தாலும், அவற்றை ஒரு திரையரங்கில் இரசிகர்களோடு இரசிகனாக அமர்ந்து கண்டு களிக்கும் அனுபவம் என்பது தனி விதம்தான்!

#TamilSchoolmychoice

அந்த அனுபவத்தை நேரிலேயே கண்டு, அனுபவித்து மகிழ கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கிற்கு வந்தார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

அவர் பார்க்க வந்த – அவரே இசையமைத்த படம் – சிம்புவின் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’.

படத்தைப் பார்க்க சத்யம் திரையரங்கம் வந்ததையும், அங்கு இரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பார்த்ததையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், இது குறித்த காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.