Home Featured நாடு ஏஇஎஸ் சம்மன்களை செலுத்தி தான் ஆக வேண்டும் – லியாவ்

ஏஇஎஸ் சம்மன்களை செலுத்தி தான் ஆக வேண்டும் – லியாவ்

1157
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர் – கடந்த 2012-ம் ஆண்டு, ஏஇஎஸ் ( Automated Enforcement Systerm) தொடங்கியதிலிருந்து, இதுவரையில் நாடெங்கிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 1.6 மில்லியன் சம்மன்களை அரசாங்கம் நீக்கப் போவதாக பரவிய வதந்தியை போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் மறுத்துள்ளார்.

இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய லியாவ், “நாங்கள் அந்த சம்மன்களை நீக்கப் போவதில்லை. அவர்கள் அதனை செலுத்தித் தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிவேகமாகச் சென்ற வாகனங்களுக்கு சம்மன் வழங்கப்பட்டு, அது இன்னும் செலுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த லியாவ், “இப்போதும் அவர்கள் அதை செலுத்தித் தான் ஆக வேண்டும். என்றாலும் தற்போது அது 150 ரிங்கிட் ஆக உள்ளது. எதிர்காலத்திலும் இதே அபராதம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

புதிய தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு முறையின் (Automated Awareness Safety System) கீழ், ஏஇஎஸ், கெஜாரா டெமெரிட் புள்ளி முறையுடன் இணைகிறது.

“அபராதங்களைச் செலுத்த மறுப்பவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்கள். அவர்களால் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க இயலாது” என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.