டோக்கியோ – ஜப்பான் நாட்டில் ஃபியூகியோகா என்ற நகரில் கடந்த வாரம் சாலையில் திடீரென மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதித்ததோடு, அப்பகுதியில் மின்சாரம், நீர், தொலைப்பேசி இணைப்புகள் உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், சாலையில் 30 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட அப்பள்ளத்தை, சுமார் 48 மணி நேரத்தில் சரி செய்து அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது ஜப்பான் அரசாங்கம்.
எனினும், அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தையும், தற்போது புதிதாக சரி செய்யப்பட்டுள்ள சாலையின் பாதுகாப்பையும் ஆய்வு செய்து வருகின்றனர் அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள். விரைவில் அச்சாலை பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் இந்த துரித நடவடிக்கை பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவி மற்ற நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.