வாஷிங்டன் – அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இன்று சந்திப்புகளை நடத்தியிருக்கின்றார்.
அந்த சந்திப்புக்களுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, இந்தியாவில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களின் மன்றத் தலைவர் ஜோன் சேம்பர்ஸ், இதுவரை அமெரிக்க நிறுவனங்கள் 28 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இனி அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மேலும் 45 பில்லியன் டாலர் முதலீடுகளைக் கூடுதலாக அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொள்ளும் என்றும் ஜோன் சேம்பர்ஸ் உறுதியளித்துள்ளார்.