இஸ்தான்புல் – துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய நகர்ப் பகுதியில் ஒரு கார் வெடிகுண்டு செவ்வாய்க்கிழமை காலை வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 36 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கிய காவல் துறையைச் சேர்ந்த ஒரு பேருந்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலையில் அதிகமானோர் பரபரப்புடன் தங்களின் பணிகளுக்காக சென்று கொண்டிருந்த தருணத்தில் இந்த கார் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு சுற்றுலா பயணிகளுக்கான மையமும், ஒரு பல்கலைக் கழகமும், மாநகராட்சித் தலைவர் அலுவலகமும் அமைந்திருக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் துருக்கியத் தலைநகரில் நடக்கும் நான்காவது பெரிய வெடிகுண்டு சம்பவம் இதுவாகும்.