Home Featured கலையுலகம் ஜான் ஆப்ரஹாம் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுகிறார் தெரியுமா?

ஜான் ஆப்ரஹாம் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுகிறார் தெரியுமா?

1570
0
SHARE
Ad

புதுடெல்லி – பாலிவுட் நடிகர்களில் கட்டுமஸ்தான உடலோடு, கவர்ச்சியாகவும் காட்சியளிப்பவர் ஜான் ஆப்ரஹாம்.

தனது இளமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவர் முழுமுழுக்க காரணமாகக் கூறுவது, தான் பின்பற்றி வரும் உணவு முறை தான் என்கிறார்.

John-Abraham-Bollywood-Actor-workout-in-gym-hd-imagesஇது குறித்து முன்னணி இணையதளம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“என்னைப் பொறுத்தவரையில் உடற்பயிற்சி தான் என்னுடைய முழு நேரத் தொழில். நான் மிகக் கட்டுப்பாடான உணவு முறைகளைப் பின்பற்றி வருகின்றேன். என்னுடைய நான் சோம்பேறியாக வைத்துக் கொள்வதே இல்லை. உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் நாட்கள் மிகக் குறைவு. காரணம் நான் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அனைத்தும் அவ்வளவு அற்புதம். சாப்பிடும் ஒவ்வொரு உணவின் பாக்கெட்டுகளிலும் அதன் கலோரி மற்றும் சத்துக்களின் பட்டியல் அச்சிடப்பட்டிருக்கும். எனவே ஒரு இனிப்பு பண்டத்தைச் சுவைப்பதை விட இயற்கை இனிப்போடு இருக்கும் ஒரு துண்டு பழம் சிறந்தது என்பேன்.”

“நான் சைவ உணவை மிகவும் விரும்பி உண்பேன். ஆனால் முட்டை மற்றும் மீன் எடுத்துக் கொள்வேன். என்னுடைய கட்டுடலைப் பாதுகாக்க எனக்கு நிறைய புரதச் சத்துகள் தேவை. அது சைவ உணவைப் பின் பற்றும் போது கடினம்.”

“நான் போர்ஸ் திரைப்படத்தில் (2011) பணியாற்றிய போது சற்று எடை கூடினேன். எனவே எனது உணவுத் திட்டத்தில் காலையில் ஓட்மீல் மற்றும் நாளொன்றுக்கு 30 முட்டைகள் இருக்கும். அதேநேரத்தில் என்னுடைய உணவுத்திட்டம் சரியான விகிதத்தில் இருப்பதையும் உறுதி செய்து கொள்வேன். மாவுச்சத்து முற்றிலும் நீக்குவதெல்லாம் கிடையாது” இவ்வாறு ஜான் ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.

இதைப் படித்துவிட்டு, நாளை முதல் 30 முட்டைகளைச் சாப்பிடத் தயாராகிவிடக் கூடாது இளைஞர்களே.. முதலில் நமது எடை, உயரம், உடற்கூறு ஆகியவற்றின் அடிப்படையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் உதவியோடு உடற்பயிற்சித் திட்டங்களும், அதற்கேற்ப உணவு முறையும் அமைத்துக் கொண்டு படிப்படியாக உடலின் கொழுப்புகளைக் குறைத்து சதை வளர்ச்சியைத் தூண்டினால் நிச்சயமாக ஜான் ஆப்ரஹாம் போன்ற உடற்கட்டை அடையலாம்.