Home Featured நாடு 19 வயது இளைஞருக்கு 1 வருட சிறை – மன்னிப்பு வழங்குவாரா ஜோகூர் சுல்தான்?

19 வயது இளைஞருக்கு 1 வருட சிறை – மன்னிப்பு வழங்குவாரா ஜோகூர் சுல்தான்?

672
0
SHARE
Ad

Johor Sultanகோலாலம்பூர் – ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலை விமர்சித்த குற்றத்திற்காக 1 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ள 19 வயது இளைஞரை மன்னித்துவிடும் அதிகாரம் ஜோகூர் சுல்தானுக்கு இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டரசு அரசியலமைப்பு கட்டுரை 42-ன் கீழ் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் அம்மாநிலத்தின் சுல்தான் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“துங்கு இஸ்மாமாயிலின் முந்தைய அறிக்கையைப் பார்த்தால், இந்த வழக்கில் மன்னிப்பு வழங்குவது கருத்தில் கொள்ளப்படுவது போல் தோன்றுகிறது” என்று வழக்கறிஞர் எரிக் பால்சன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice