Home கலை உலகம் மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா?: ஜான் அபிரகாம் விளக்கம்

மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா?: ஜான் அபிரகாம் விளக்கம்

632
0
SHARE
Ad

ஆக. 7- ஜான் அபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள மெட்ராஸ் கபே படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தில் படத்தை வெளியிடக்கூடாது  என்று தமிழ் அமைப்புகள் வற்புறுத்தி உள்ளன.

#TamilSchoolmychoice

John-Abraham-at-Madras-Cafe-Press-Meet-Chennai-Photo-24இந்த நிலையில் மெட்ராஸ் கபே படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியிடுவதற்காக ஜான் அபிரகாம் நேற்று மாலை சென்னை சத்யம் தியேட்டருக்கு வந்தார்.

அவருக்கு பாதுகாப்பு அளிக்க தியேட்டரை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

முன்னோட்டம் வெளியீடு செய்துவிட்டு ஜான் அபிரகாம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மெட்ராஸ் கபே விடுதலைப்புலிகளுக்கு எதிரான படமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து ஜான் அபிரகாம் கூறியதாவது:–

madras-cafeமெட்ராஸ் கபே படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை. இலங்கையில் 1980 மற்றும் 90–களில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து படம் எடுத்துள்ளோம். அதை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ எந்த கருத்தையும் சொல்லவில்லை.

நடுநிலையாக கருத்தை பதிவு செய்துள்ளோம். படத்தை பார்க்காமலேயே எதிர்ப்பது சரியல்ல. எதிர்ப்பாளர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட தயார்.

madras-cafe-4a_0இப்படத்தில் நாயகியாக நர்சிஸ் பக்ரி நடித்துள்ளார். சூஜித் சர்க்கார் இயக்கியுள்ளார். கற்பனை கலந்த கலவை படமாக தயாராகியுள்ளது.

இலங்கை, லண்டன், தாய்லாந்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த படத்தை எடுக்க இலங்கை அதிபர் ராஜபக்ச பணம் கொடுத்தாரா? என்ற கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளர் இங்கு இருக்கிறார். இதைகேட்டு அவர் மிகவும் வருத்தப்படுவார் என்றார்.