புதுடெல்லி, ஆக. 20- விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் தடை கோரியுள்ளன.
எனவே அப்படத்தை நான் நிச்சயம் திரையில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
இப்படத்தில், ராஜீவ் காந்தியை கதாநாயகனாகவும், பிரபாகரனை வில்லனாகவும் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான், ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்டோர் அப்படத்திற்கு தடை கோரியுள்ளனர்.
விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி, அவர்களை அழிக்கும் வேலையில் கதாநாயகன் ஜான் ஆபிரகாமும் ஈடுபடுகிறார். அப்போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப்புலிகள் தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டு அவர் கொல்லப்படுவது போல் கதை முடிகிறது.
இதில் சிங்கள ராணுவ படுகொலைகள் எதுவும் காட்டப்படவில்லை. விடுதலைபுலிகளையும், ஈழத்தமிழர்களையும் வில்லனாகவும், கேரளாவை சேர்ந்தவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்துள்ளனர்.