வாஷிங்டன், ஆக .20- அமெரிக்க அதிபர் ஒபாமா தனது எட்டு நாள் கோடை விடுமுறையை முடித்துக்கொண்டு இன்று விடியற்காலை வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார்.
பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தலைநகர் வாஷிங்கடனில் உள்ள விமானப்படைத் தளமான ஆண்ட்ரூஸ் விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து ஒரு உலங்கு வானூர்தி மூலம் இன்று அதிகாலை வெள்ளை மாளிகையை அவர்கள் அடைந்தனர்.
கோல்ப் விளையாட்டில் விருப்பமுடைய ஒபாமா, தனது விடுமுறையிலும் நண்பர்களுடன் கோல்ப் விளையாடிக் களித்தார். நேற்று கிளம்புவதற்கு முன்னும் ஆறாவது முறையாக விளையாட்டைத் தொடர்ந்தார். உலக வங்கித் தலைவரான ஜிம் யாங் கிம்மும் அதிபருடன் விளையாட்டில் ஈடுபட்ட ஒருவராவார். ஒபாமா விடுமுறையில் இருந்தபோதிலும், உளவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகள் அவருக்குத் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசும், அரசாங்க ஊழியர்களின் துணைத் தலைவர் ரோப் நபோர்சும் அதிபருடனே சென்றிருந்தனர். எகிப்து நாட்டில் நடந்த வன்முறைக் கலவரங்கள் குறித்து மட்டுமே, இந்த விடுமுறை நாட்களின் நடுவே ஒபாமா தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.