Home Featured உலகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் வரலாற்றுபூர்வ உரையின் முக்கிய அம்சங்கள்!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் வரலாற்றுபூர்வ உரையின் முக்கிய அம்சங்கள்!

1498
0
SHARE
Ad

வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரலாற்றுபூர்வ உரையின்போது அவர் தெரிவித்த சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • உலகில் உள்ள ஜனநாயகங்களின் ஆலயமாகக் கருதப்படும் இந்த அமெரிக்க நாடாளுமன்றம் மற்ற ஜனநாயகங்களுக்கு வலுவூட்டி இருக்கின்றது – வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
  • என்னை இந்த மதிப்பு மிகுந்த மண்டபத்தில் பேச அனுமதித்திருப்பதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டையும், அதன் 1.25 பில்லியன் மக்களையும் நீங்கள் கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள்.

Capitol Hill-America parliament-

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்திருக்கும் கேப்பிட்டல் ஹில்….

  • உலகம் எங்கிலும் உள்ள மனித இனத்திற்காக சேவை புரிந்த ஆண் வீரர்களையும், பெண் வீராங்கனைகளையும் தாயகமாகக் கொண்ட – இந்த சுதந்திரமான நாட்டின் தியாகங்களை  இந்தியா பாராட்டுகிறது.
  • இந்தியா சுதந்திரமான நாடாக உருவெடுத்தபோது, அதன் எதிர்காலம் குறித்த ஐயப்பாடுகள் இருந்தன. ஆனால் நாங்கள் எங்களின் நம்பிக்கையை ஜனநாயகத்தின் மீதுதான் வைத்தோம்.
  • இன்று இந்தியா ஒரே நாடாக வாழ்ந்து வருகிறது. இந்தியா ஒரே நாடாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒரே நாடாக இந்தியா கொண்டாடப்படுகின்றது.
  • மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைதான் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் ஒரு மாபெரும் ஹீரோவாக உருவெடுப்பதற்கு உந்து சக்தியாக இருந்தது.
  • நூறாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேக்கார் பெற்ற கல்வியும், அவர் இங்கு பெற்ற பக்குவமும்தான் அவர் ஒரு மேதாவியாக உருவாவவதற்குக் காரணமாக இருக்கின்றது.
  • Narendra Modi-Ryan-before american parliament speechஅமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வருகை தரும் மோடியை வரவேற்கும் அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர் பால் ரயான்…
  • பயங்கரவாதிகள் 2008ஆம் ஆண்டில் மும்பை நகர் மீது தாக்குதல் நடத்தியபோது அமெரிக்க நாடாளுமன்றம் காட்டிய அக்கறையையும், ஆதரவையையும் இந்தியா எப்போதும் மறக்காது.
  • அமெரிக்காவில் சுமார் 30 மில்லியன் பேர் இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகாவை பின்பற்றி வருகின்றார்கள். ஆனால் நாங்கள் இன்னும் இதற்கான காப்புரிமையை (Intellectual Property) கோரவில்லை (நகைச்சுவையுடன்)
  • நமது இரண்டு நாடுகளையும் இணைக்கும் மற்றொரு அம்சம் தனித்தன்மை வாய்ந்த, திறமை வாய்ந்த 3 மில்லியன் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களாவர்.
  • சமூக, பொருளாதார உருமாற்றங்களின் மூலம் எங்களின் ஒரு பில்லியன் மக்களை பொருளாதார ரீதியாக வலுவூட்ட வேண்டும் என்பதுதான் எனது கனவாகும்.
  • தவிர்க்க முடியாக ஒரு நட்புறவு நாடாக நான் அமெரிக்காவைப் பார்க்கிறேன். வலுவான, வளமையான இந்தியா, அமெரிக்காவின் நலன்களுக்கு வியூக ரீதியாக நல்லது.Narendra Modi-US Parliament speech                            அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் மோடி….
  • இந்தியாவின் வலுவான பொருளாதாரம், ஆண்டுக்கு 7.6 சதவீதமாக உயர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி – இவற்றால் நமது இரண்டு நாடுகளும் இணைந்து வளர்ச்சி பெற, வளமை பெற பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
  • இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவம் மூலம் ஆசியாவிலிருந்து, ஆப்பிரிக்கா வரை, இந்தியப் பெருங்கடல் தொடங்கி பசிபிக் கடல் வரை அமைதி, வளப்பம், நிலைத்தன்மை ஆகியவை உருவாகும்.
  • அரசியல் இலாபங்களுக்காக, பயங்கரவாதத்தைப் போதிக்கும், பின்பற்றும் பயங்கரவாதிகளை எதிர்க்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் பாராட்டுகிறேன்.
  • பூமித்தாயோடு இணைந்து ஒத்து வாழ்வதுதான் இந்தியாவில் உள்ள எங்களின் பாரம்பரிய நம்பிக்கையாகும்.
  • நமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த நெருக்கடிகள் தற்போது நமக்குப் பின்னால் போய்விட்டன.  நமது முன்னே இருப்பது உறுதியான அடித்தளத்தைக் கொண்ட எதிர்காலம்தான்.
  • இசைக்குழுவில் வாசிக்கும் இசைக் கலைஞர்கள் தங்களின் இசைக் கருவிகளை நன்கு சரிப்படுத்தி வைத்திருக்கின்றனர். இசையை வாசிக்கத் தொடங்குவதற்கான அறிகுறியும் கொடுக்கப்பட்டாகிவிட்டது. இப்போது ஒரு புதிய இசை ஒலிக்கத் தொடங்கி விட்டது.
#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு