Home Featured உலகம் குத்துச் சண்டை மாவீரன் முகம்மது அலி சொந்த ஊரில் நல்லடக்கம்!

குத்துச் சண்டை மாவீரன் முகம்மது அலி சொந்த ஊரில் நல்லடக்கம்!

557
0
SHARE
Ad

Muhammad-Ali-லூயிஸ்வில் – குத்துச்சண்டை உலகில் தனது முத்திரையைப் பதித்து காலத்தால் அழியாத வரலாறு படைத்த முகம்மது அலி இன்று நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவரது சொந்த ஊரான லூயிஸ்வில் என்ற ஊரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இங்குதான் அலி பிறந்து வளர்ந்தார் என்பதோடு, இங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில்தான் தனது இளவயதில் அவர் குத்துச் சண்டைக்கான பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது ஆரம்ப கால சிந்தனைகள், அனைத்தும் இந்த சிறிய ஊரில் இருந்துதான் உருவாகின என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

#TamilSchoolmychoice

முகம்மது அலியின் நல்லுடல், வாகன அணிவகுப்போடு, ஊர்வலமாக சுமார் 90 நிமிடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் லூயில்வில் நகரில் உள்ள கேவ் ஹில் மயானத்தில், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மட்டுமே கலந்து கொண்ட தனிப்பட்ட சடங்குகளுக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.