Home உலகம் குத்துச்சண்டை வீரர் முகமட் அலி உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்

குத்துச்சண்டை வீரர் முகமட் அலி உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்

767
0
SHARE
Ad

அக்டோபர் 21 – பிரபல குத்துச்சண்டை வீரர் முகமட் அலியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 72 வயதான அவர் கடந்த 20 ஆண்டுகளாக பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில மாதங்களில் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.

Muhammad-Ali Boxer

கம்பீரமான குத்துச் சண்டை வீரராக அன்று…..

#TamilSchoolmychoice

“குத்துச்சண்டை அரங்கில் அவருடன் தீவிரமாக மோதிய ஜோ பக்னர் (64 வயது) மற்றும் லியோன் ஸ்பின்க்ஸ் (61 வயது) ஆகியோரும் தீவிர இருதய மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரில் லியோன் ஸ்பின்க்சுக்கு அண்மையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன,” என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முகம்மது அலி-ஜோ பக்னர் இடையிலான சரித்திரப் பிரசித்தி பெற்ற குத்துச் சண்டை கோலாலம்பூரில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரிசோனாவில் உள்ள வீட்டில் வசித்து வரும் முகமட் அலியால் அறவே பேசவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவோ முடியவில்லை என கடந்த மாதம் அவரது இளைய சகோதரர் ரஹ்மான் அலி தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், தனது சகோதரர் சில நாட்களிலேயே இறந்துபோகவும் வாய்ப்புள்ளதாக ரஹ்மான் அலி கூறியிருந்தார்.

Muhamad Ali Boxer present day photo

இன்றைய முகம்மது அலி…முதுமையின் நிழலில்…நோயின் பிடியில்….

ஆனால் இத்தகவல்களை முகமட் அலியே பின்னர் மறுத்ததால் அவரது ரசிகர்கள் சமாதானமடைந்தனர்.  இதையடுத்து அண்மையில் தனது தம்படம் (செஃல்பி) படம் ஒன்றையும் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்த அலி, இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், தான் உற்சாகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே தனது தந்தை முகமட் அலி தொடர்ந்து நலமாக வாழ்வார் என அலியின் மகள் ஹானா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நாள் காலையும் அவருடன் பேசுகிறேன். காலை வேளையில் அவர் நன்றாகப் பேசுவார். அப்போது அவரது மென்மையான, இனிமையான குரலைக் கேட்க முடியும். நகைச்சுவையாகவும், இந்த வயதிலும் குத்துச்சண்டை அரங்குக்கு திரும்புவது குறித்து வேடிக்கையாகவும் பேசுவார். முகமட் அலியாக தான் மகிழ்ச்சியுடன் வாழ்வதை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கக் கூடும்,” என்கிறார் ஹானா.