Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா-இந்தோனேசியா கூட்டு தயாரிப்பில் ஏசியன் கார்கள்!

மலேசியா-இந்தோனேசியா கூட்டு தயாரிப்பில் ஏசியன் கார்கள்!

578
0
SHARE
Ad

Joko with Najib 600 x 400கோலாலம்பூர், அக்டோபர் 21 – மலேசியா மற்றும் இந்தோனேசியா கூட்டாக  இணைந்து ‘ஏசியன்’ (ASEAN) கார்கள் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் புதிய அரசு பதவி ஏற்றது முதல் அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவுடன் இணைந்து ‘ஏசியன்’ (ASEAN) கார்கள் தயாரிப்பில் அந்நாடு ஈடுபட இருக்கின்றது. இது தொடர்பாக பிரதமர்  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறுகையில், “இந்தோனேசியாவில் புதிய பிரதமராக தலைமை ஏற்றுள்ள ஜோகோ விடோடோ, கூட்டுக் கார்கள் தயாரிப்பு பற்றிய மலேசியாவின் எண்ணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடிப்படை சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன” என்றார்.

“மலேசியாவின் தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான ‘ப்ரோடான் ஹோல்டிங்ஸ்’ (Proton Holdings), இந்த புதிய திட்டத்தில் ஈடுபடுத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் இந்தோனேசியாவின் தற்போதய புதிய அரசு பற்றி கூறுகையில், “மலேசியாவுடன் தற்போதய இந்தோனேசிய அரசு இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் வியாபாரம் அதிகரிக்கும். அதேவேளையில், இந்தோனேசியாவில் இயற்றப்படும் புதிய சட்டங்கள், மலேசிய முதலீட்டாளர்களை எவ்வகையிலும் பாதிக்காது என்பது மட்டும் நிச்சயம்” என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் இந்தோனேசிய வேளாண்துறையில், அந்நிய முதலீட்டாளர்களைக் குறைப்பது தொடர்பாக  சட்டங்கள்  நடைமுறைக்கு  கொண்டுவர  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தோனேசியா பற்றி பிரதமர் நஜிப்பின் அறிக்கை, மலேசிய முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பது நிச்சயம்.