பாரிஸ் – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை அடுத்து, உலக அளவில் அதிக இரசிகர்களை ஈர்க்கும் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான காற்பந்து போட்டிகள் (யூரோ) நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் (மலேசிய நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணி) பிரான்ஸ் நாட்டில் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.
முதல் ஆட்டத்தில் போட்டிகளை ஏற்று நடத்தும் உபசரணை நாடான பிரான்ஸ் ரொமானியாவுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய பிரான்ஸ் நாட்டின் டிமித்ரி பேயட் (படம்) அடித்த கோல் பிரான்சை முதல் ஆட்டத்திலேயே வெற்றி கொள்ள வைத்துள்ளது.
ஆட்டம் நடைபெற்ற அரங்கம் பிரான்ஸ் இரசிகர்களால் நிரம்பி வழிந்து, அவர்களின் ஆதரவால் கோலாகலமான, உற்சாக சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.
பிரான்ஸ்-ரொமானியா காற்பந்து ஆட்டம் நடைபெற்ற அரங்கத்தில் உற்சாக இரசிகர்கள்