Home Featured நாடு நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜூன் 15 முதல் பிரிம் உதவித் தொகை!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜூன் 15 முதல் பிரிம் உதவித் தொகை!

778
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜூலை மாதத் தொடக்கத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரிம் ((BR1M) எனப்படும் மக்கள் உதவித் தொகையின் மூன்றாவது தவணைப் பணம் முன்கூட்டியே ஜூன் 15 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

brim

2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்போது இந்த ஆண்டுக்கான பிரிம் உதவித் தொகை நான்கு கட்டங்களாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

 முதல் கட்டப் பணம் ஜனவரி 28ஆம் தேதி முதற்கொண்டும், இரண்டாவது கட்டப் பணம் ஏப்ரல் 28 முதற்கொண்டும் வழங்கப்பட்டது.

 ஜூன் 15 முதல் வழங்கப்படவிருக்கும் தொகை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அங்கீகாரக் கடிதத்தைக் காட்டி, எல்லா பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கிக் கிளைகளிலும் தங்களுக்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அங்கீகாரக் கடிதங்கள் உரியவர்களின் முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும், கட்டணமற்ற தொலைபேசி எண்ணிலும், அல்லது கீழ்க்காணும் இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்:

1800-88-2716

br1m@treasury.gov.my.