Home Featured நாடு ஜூன் 30-ம் தேதிக்குள் ஓசிஐ விண்ணப்பம் – கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் அறிவிப்பு!

ஜூன் 30-ம் தேதிக்குள் ஓசிஐ விண்ணப்பம் – கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் அறிவிப்பு!

1064
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிஐஓ (Person of Indian Origin) வைத்திருக்கும் மலேசியர்கள் ஓசிஐ (Overseas Citizen of India) -க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி என அறிவித்திருக்கிறது கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம்.

OCI Cards Indiaதற்போது பிஐஓ வைத்திருப்பவர்கள் (https://passport.gov.in/oci) என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று, ஓசிஐ அட்டைக்கு விண்ணப்பித்து, அதை இந்தியத் தூதரக அலுவலகத்தில் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இணையப்பக்கத்தில் நிரப்பட்ட ஓசிஐ விண்ணப்பத்தை நகல் எடுத்து, அதனுடன் மலேசிய கடப்பிதழ், பிஐஓ அட்டை, கையெழுத்து, புகைப்படம் ( size 2×2 white background) ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தூதரக அலுவலகத்தில் விண்ணப்பிக்க வரும் போது மலேசியக் கடப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் உடன் எடுத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:-

Level 28, Menara 1 MK, No. 1,

Jalan Mont Kiara, 50480

Kuala Lumpur.

between 9.30am-12.00noon (Monday-Friday).