Home நாடு எஸ்பிஎம் தேர்வில் தமிழ்-தமிழ் இலக்கியம் எடுக்கத் தடையில்லை- உறுதியளித்தார் பிரதமர்

எஸ்பிஎம் தேர்வில் தமிழ்-தமிழ் இலக்கியம் எடுக்கத் தடையில்லை- உறுதியளித்தார் பிரதமர்

868
0
SHARE
Ad

Najib-2---Sliderகிள்ளான், மார்ச் 18 – எஸ். பி. எம் தேர்வில்தமிழ்-தமிழ் இலக்கியம் உட்பட 12 பாடங்கள் எடுக்க எவ்விதத் தடையுமில்லை என்று நேற்று கிள்ளானில் சிலாங்கூர் மஇகா ஏற்பாட்டில் நடந்த நிகழ்வொன்றில் சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்ட டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மக்களின் பலத்த ஆரவாரங்களுக்கிடையே தெரிவித்தார்.

ஏற்கனவே கல்வி அமைச்சர் ஹிஷாமுடின், எஸ். பி. எம் தேர்வில் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என்று அறிவித்ததால், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும், அமைச்சர்கள் டத்தோஸ்ரீ பழனிவேலுவும், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் இது குறித்து மக்களின் அதிருப்தியை அமைச்சரவையில் விவாதித்ததும் அனைவரும் அறிந்ததே.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், கிள்ளானில் நடைபெறும் நிகழ்வொன்றில் பிரதமர் நல்ல செய்தி சொல்வார் என்று அப்போது அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

தேர்தல் நேர அறிவிப்பாக இல்லாமல் இருக்கவேண்டும்

அதன்படியே நேற்றைய நிகழ்வில் இந்திய மாணவர்கள் தமிழ்-தமிழ் இலக்கியத்தைத் தேர்வு பாடமாக எழுதலாம்,இதற்கு முழு அனுமதி வழங்கப்படுகிறது என்ற மகிழ்வான செய்தியை பிரதமர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே அமலில் இருந்த, இந்த (10+2) 12 பாடங்கள் எடுக்கலாம் என்ற நடைமுறையை அரசு தேவையில்லாமல் மீட்டுக்கொண்டு,மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வெறுப்பை சம்பாதித்துவிட்டு, மீண்டும் அனுமதி அளிக்கவேண்டிய அவசியமென்ன?

ஆகவே எது எவ்வாறிருப்பினும், பிரதமரின் இந்த 12 பாடங்கள் அறிவிப்பு நமக்கு நிச்சயம் மகிழ்ச்சியே.

ஆனால், இது பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்களைத் திருப்தி செய்யும் தற்காலிக அறிவிப்பாக மட்டும் இல்லாமல், நிரந்தர நடைமுறையாகத் தொடரப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும்.