Home Featured நாடு தியோமான் கற்பழிப்பு வழக்கு: அரசு அதிகாரி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது!

தியோமான் கற்பழிப்பு வழக்கு: அரசு அதிகாரி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானது!

1005
0
SHARE
Ad

rapeகோலாலம்பூர் – தியோமானில் 17 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில், சரணடைந்த அரசு அதிகாரி, சியாபு வகைப் போதைப் பொருளைப் பயன்படுத்தி வந்துள்ளது அவரது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதனை ரொம்பின் ஓசிபிடி துணைக் கண்காணிப்பாளர் முகமட் ஐடில் ரோனே அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அவரது மரபணுவும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

17 வயதுப் பெண் கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 7-வது நபராக அந்த அரசு அதிகாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.