Home Featured நாடு தியோமான் கற்பழிப்பு வழக்கு: அரசு அதிகாரி பிணையில் விடுவிப்பு!

தியோமான் கற்பழிப்பு வழக்கு: அரசு அதிகாரி பிணையில் விடுவிப்பு!

538
0
SHARE
Ad

Rape-Pencil-Sketch (450x230)குவாந்தான் – தியோமான் தீவில் 17 வயது பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில், சரணடைந்த அரசு அதிகாரி, காவல்துறையில் வாக்குமூலம் அளித்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

“அந்நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்று பகாங் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ ஷரிபுடின் அப்துல் கானி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்த அந்நபரை பரிசோதனைகளுக்கு உட்படுத்திய காவல்துறை, அவர் போதைப் பழக்கமுள்ளவர் என்பதை சிறுநீர் பரிசோதனையின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

#TamilSchoolmychoice