Home Featured இந்தியா மோடியைச் சந்தித்த பின்னர் நிர்மலா சீதாராமனுடன் ஜெயலலிதா சந்திப்பு!

மோடியைச் சந்தித்த பின்னர் நிர்மலா சீதாராமனுடன் ஜெயலலிதா சந்திப்பு!

1123
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று மாலை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா நடத்திய சந்திப்பு குறித்த முக்கிய அம்சங்கள்:

Jayalalitha-received in New Delhi

  • புதுடில்லி விமான நிலையம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றார்.
  • Jayalalitha-New Delhi-Tamil Nadu houseபுதுடில்லி தமிழ் நாடு இல்லம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மரியாதை அணிவகுப்பு நடத்தி வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பை ஜெயலலிதாக ஏற்றுக் கொண்ட பின்னர் அவரது அலுவல்கள் தொடங்கின.
  • Narendra Modi-Jayalalitha-June 2016-meetingபிரதமர் மோடியை பிற்பகல் 4.30 மணியளவில் சந்தித்த ஜெயலலிதா, அவரிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
  • மோடியுடனான ஜெயலலிதாவின் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
  • மோடியைச் சந்தித்த பின்னர் ஜெயலலிதா, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
  • பாஜகவின் மற்றொரு இணை அமைச்சரான பொன்.இராதாகிருஷ்ணனையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். அவர்களின் பேச்சுவார்த்தை குளச்சல் துறைமுகம் போன்ற விவகாரங்களை மையமாகக் கொண்டிருந்தது.

(அடுத்து: ஜெயலலிதா வழங்கிய கோரிக்கைகள் – முக்கிய அம்சங்கள் என்ன?)