Home Featured உலகம் யூரோ 2016: அட்டகாச இரசிகர்களால் ரஷியாவுக்கு இடைக்காலத் தடை!

யூரோ 2016: அட்டகாச இரசிகர்களால் ரஷியாவுக்கு இடைக்காலத் தடை!

641
0
SHARE
Ad

EURO 2016 - LOGOபாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் ரஷியாவும், இங்கிலாந்தும் மோதிய ஆட்டத்தில் மோசமாக நடந்து கொண்டு ரகளை செய்த ரஷிய இரசிகர்களின் நடத்தையால், ரஷியா, ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து தடை செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது ரஷியாவுக்கு இடைக்காலத் தடை (Suspended Disqualification) விதிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில்  ஐரோப்பிய காற்பந்து சம்மேளனம் கூட்டம் நடத்தி, ரஷியாவின் நிலைமை குறித்த இறுதி முடிவு எடுக்கும்.

இதற்கிடையில் 50 ரஷிய இரசிகர்கள் தங்களின் மோசமான நடத்தை காரணமாக பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

காற்பந்து விளையாட்டுப் போட்டிகளின் போது நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதில் சிறப்புப் பயிற்சியும், அனுபவமும் பெற்ற பிரிட்டிஷ் போலீசாரின் குழு ஒன்றும் விரைவில் பிரான்சுக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா இடம் பெற்றுள்ள ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ், சுலோவோக்கியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ரஷியா தடை செய்யப்பட்டு வெளியேற்றப்படால், இந்தக் குழுவின் ஆட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியிருக்கும்.