Home Featured உலகம் யூரோ 2016: ஹங்கேரி 2 – ஆஸ்திரியா 0; போர்ச்சுகல் 1 -ஐஸ்லாந்து 1

யூரோ 2016: ஹங்கேரி 2 – ஆஸ்திரியா 0; போர்ச்சுகல் 1 -ஐஸ்லாந்து 1

528
0
SHARE
Ad

euro-Hungary-austria-score

euro-portugal-icelandபாரிஸ் – நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ஹங்கேரி சிறப்பாக விளையாடி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இரண்டாவது ஆட்டத்தில் போர்ச்சுகலும், ஐஸ்லாந்தும் தலா ஒரு கோல் போட்டு சம நிலை கண்டன.

#TamilSchoolmychoice

முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகலின் நானி ஒரு கோல் அடித்து போர்ச்சுகலை முன்னணிக்குக் கொண்டு வந்தார். ஆனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஐஸ்லாந்தின் ஜார்னாசன் போட்ட கோலால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.

607758647_MS_7995_4840C5AE4512C970354898C6818E4A16நேற்றைய ஆட்டத்தில் தனது திறமையைக் காட்டும் ரொனால்டோ..

இந்த ஆட்டத்தில் தனது நாட்டை பிரதிநிதித்தன்  மூலம் போர்ச்சுகல் ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டா தனது 127-வது அனைத்துலக காற்பந்து விளையாட்டுப் போட்டி பங்கேற்பை பதிவு செய்தார்.

இதற்கு முன் போர்ச்சுகல் நாட்டில் இந்த சாதனையைப் புரிந்தவர் லூயிஸ் ஃயியூகோ என்ற ஆட்டக்காரர் ஆவார். இந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகள் நிறைவுகள் பெறும் அதிகமான அனைத்துலக காற்பந்து போட்டிகளில் பங்கு பெற்ற விளையாட்டாளராக ரொனால்டோடோ திகழ்வார்.