Home Featured இந்தியா ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு: 94 பக்கங்கள்! 29 அம்சங்கள்! முக்கியமானவை என்ன?

ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு: 94 பக்கங்கள்! 29 அம்சங்கள்! முக்கியமானவை என்ன?

679
0
SHARE
Ad

புதுடில்லி – நேற்று நடைபெற்ற ஜெயலலிதா-நரேந்திர மோடி சந்திப்பின் போது, ஜெயலலிதா 94 பக்கங்களைக் கொண்ட, 29 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார்.

Narendra Modi-Jayalalitha-June 2016-meetingஅந்த மனுவின் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:

  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
  • காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
  • கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும்.
  • தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
  • நதிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட வேண்டும்
  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்க வேண்டும்.
  • கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் மறு சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்த வேண்டும்.
  • கூடங்குளம் அணுமின் நிலைய இரண்டாவது கட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
  • தமிழை நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
  • மெட்ரோ இரயில் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் – முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
  • பறக்கும் ரயில் – மோனோ இரயில் – சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க வேண்டும்.
  •  ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்சேவை வரி மீதான மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.
  •  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது
  •  அரசு நடத்தும் தொலைக்காட்சி இணைப்பு (கேபிள்) சேவைக்கு டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் உரிமம் அளிக்கப்பட வேண்டும்.
  • கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.
  • தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
  • மற்ற சில அம்சங்கள் வெள்ள நிவாரணம், தமிழகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளாகும்.

Nirmala Seetharaman-after meeting Jayalalithaஜெயலலிதாவுடனான சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றும் நிர்மலா சீதாராமன் 

#TamilSchoolmychoice

பிரதமருடனான தனது சந்திப்பை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின்னர் மத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்தார்.

தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு நேற்றிரவே ஜெயலலிதா சென்னைக்கு தனி விமானம் மூலம் திரும்பினார்.