வாஷிங்டன் – சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான் வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாடி இறந்துவிட்டதாகக் கூறப்படும் தகவலை பெண்டகன் அதிகாரிகள் “சந்தேதேகக் கண்ணோடு” பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாக்தாத்தில் உள்ள அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் கிறிஸ்டோபர் சி. கார்வெர் ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலில், “இதற்கு முன்பும் இது போன்ற செய்திகள் வெளியாகியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஈராக் மற்றும் இன்னும் மற்ற செயல்பாடுகளில், உறுதியான தகவல்கள் கிடைக்கும் வரை ஆரோக்கியமான அவநம்பிக்கையுடனேயே (skepticism) செயல்படவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராக்காவில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதலில் அபு பக்கர் கொல்லப்பட்டதாக, நேற்று சிரிய ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.