Home Featured உலகம் புதிய அதிபருக்கு நாங்கள் யாரென்று காட்டவே கொலை செய்தோம் – அபு சயாப் தகவல்!

புதிய அதிபருக்கு நாங்கள் யாரென்று காட்டவே கொலை செய்தோம் – அபு சயாப் தகவல்!

1055
0
SHARE
Ad

Robert hall John Ridsdel Inquirer ANN 130616ஜாம்போங்கா நகரம் – புதிதாகப் பதவி ஏற்கவுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தேவுக்கு தாங்கள் யாரென்று காட்டவே கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்ததாக அபு சயாப் அறிவித்துள்ளது.

இது குறித்து கடந்த திங்கட்கிழமை அபு சயாப் செய்தித் தொடர்பாளர் அபு ராமி ‘இன்கொயரெர்’ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இது புதிய அதிபர் டுடெர்தேவுக்காக. நாங்கள் கனட நாட்டவருக்கு என்ன செய்வோம் என்பதை உனக்குக் காட்டவே இதைச் செய்துள்ளோம்” என்று அபு ராமி தெரிவித்துள்ளான்.

முன்னதாக இதே செய்தி நிறுவனத்திற்கு அபு ராமி அளித்த தகவலில், 600 மில்லியன் பெசோ (53 மில்லியன் ரிங்கிட்) பிணைத்தொகையை நிர்ணயிக்கப்பட்ட நேரமான 3 மணிக்குள் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் கொலை செய்தோம் என்று தெரிவித்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice