Home Featured உலகம் டிஸ்னி ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றது!

டிஸ்னி ரிசார்ட்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றது!

1143
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512லேக் புன விஸ்டா, புளோரிடா – ஒர்லாண்டோ அருகே உள்ள டிஸ்னி ரிசார்ட்டில், முதலை ஒன்று 2 வயது சிறுவனைத் தாக்கி நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டதாகவும், தற்போது அச்சிறுவனைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏரியின் அருகே நடந்து கொண்டிருந்த அச்சிறுவனை முதலை ஒன்று தாக்கி, உள்ளே இழுத்துச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அச்சிறுவனின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அவனது தந்தை, உடனடியாக ஏரியில் குதித்து, முதலையிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரால் தனது மகனை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சிறுவனை முதலை இழுத்துச் சென்று பல மணி நேரங்கள் ஆகிவிட்டதால், உயிரோடு கிடைக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.