Home apponly யூரோ: வேல்ஸ் 3 – ரஷியா 0; இங்கிலாந்து 0 – சுலோவாக்கியா 0

யூரோ: வேல்ஸ் 3 – ரஷியா 0; இங்கிலாந்து 0 – சுலோவாக்கியா 0

730
0
SHARE
Ad

euro-wales-russia-score

euro-england-slovakia-score

பாரிஸ் – நேற்றைய ‘பி’ பிரிவு ஆட்டங்களில் வேல்ஸ் 3-0 கோல்கணக்கில் ரஷியாவைத் தோற்கடித்ததன் மூலம் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் 16 நாடுகளில் ஒன்றாக முன்னேறியுள்ளது.

#TamilSchoolmychoice

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, மீண்டும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறி, சுலோவாக்கியாவுடனான தனது ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து ‘பி’ பிரிவில் இரண்டாவது நிலையில் இருந்தாலும், இங்கிலாந்து இரண்டாவது சுற்றுக்குச் செல்ல முடியுமா என்பது இன்னும் ஊடலாடிக் கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது.

euro-england-slovakia-rooney நேற்றைய ஆட்டத்தில் ரூனியின் ஆட்டம்! அவர் போன்ற முன்னணி ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்தும்  இங்கிலாந்து கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறியது ஒரு சோகம்தான்.