Home Featured நாடு வருமான வரி கட்டாத 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

வருமான வரி கட்டாத 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை!

813
0
SHARE
Ad

Immigration Malaysiaகோலாலம்பூர் – சுமார் 116,836 மேற்பட்ட மலேசியர்கள், வருமான வரி கட்டாத காரணத்தால், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, வருமான வரி மூலமாக அரசாங்கத்திற்கு வரவேண்டிய சுமார் 2.55 பில்லியன் ரிங்கிட் நிலுவையில் உள்ளதாக ஐஆர்பி (Inland Revenue Board) அறிவித்துள்ளது.

அதோடு, ஆர்ஜிபிடி (Real Property Gains Tax) கட்டாத 9,665 தனிநபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூலமாக 150 மில்லியன் ரிங்கிட் நிலுவையில் உள்ளதாகவும் ஐஆர்பி அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆகவே, வருமான வரி செலுத்தாத மலேசியர்கள், வெளிநாடுகளுக்குப் பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பு தங்களது நிலை என்னவென்பது குடிநுழைவுத்துறை மூலமாகத் தெரிந்து கொள்ளும்படியும் ஐஆர்பி தெரிவித்துள்ளது.

இதனிடையே வருமான வரி கட்டாத காரணத்தால், தேசிய காற்பந்து அணியின் கோல்கீப்பரான கைருல் ஃபாக்மி சே மட், டைகர் ஓசினியா சுற்றுப் பயணத்தில் பங்கேற்க முடியவில்லை என மலேசிய காற்பந்து சங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது.

கடந்த ஜூன் 11-ம் தேதி, பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ள இயலாத அளவிற்கு மலேசியக் குடிநுழைவு இலாகா நாட்டை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி கட்டுவோர் கீழ்காணும் இணையதளத்திற்குச் சென்று தங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்:-

Semakan Status Kawalan Imigresen