பாரிஸ் – ஐரோப்பியக் காற்பந்துப் போட்டிகளுக்கான முதல் சுற்று குழு ஆட்டங்கள் நிறைவையடைந்து, இரண்டாவது சுற்றுக்கான ஆட்டங்கள் சனிக்கிழமை தொடங்குகின்றன.
இதனை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமையும், இன்று வெள்ளிக்கிழமையும் போட்டிகளுக்கு ஓய்வு நாட்களாகும்.
16 நாடுகள் பங்கு பெறப்போகும் இந்தப் போட்டிகளின் பட்டியல் இதுதான்:
நடக்கப் போகும் சில ஆட்டங்கள் சுவாரசியமானவை. பரபரப்பும், விறுவிறுப்பும் சேர்க்கப் போகும் இந்த ஆட்டங்களில் முக்கியமானது திங்கட்கிழமை (ஜூன் 27) நடைபெறப் போகும், இத்தாலி, ஸ்பெயின் இடையிலான ஆட்டம்!
இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணத்தை ஆராய, கொஞ்சம் பின்னோக்கிப் போக வேண்டும்.
2012ஆம் ஆண்டு! அப்போது நடைபெற்ற யூரோ ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்த இரண்டு நாடுகளும் சந்தித்தன. அப்போது ஸ்பெயின் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலியை வென்று சாதனை படைத்தது.
எனவே, இந்த 2012 இறுதி ஆட்டத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வண்ணம் இந்த முறை ஸ்பெயின் மீண்டும் இத்தாலியை வென்று சாதனை படைக்குமா?
அல்லது,
2012 தோல்வியைப் பழிதீர்த்துக் கொள்ளும் வண்ணம், இந்த முறை ஸ்பெயினை இத்தாலி தோற்கடிக்குமா என்பதைக் காண இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரங்கள்