Home Featured நாடு மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது தேசியப் பேராளர் மாநாடு – ரிஷிகுமாருடன் பிரத்யேக நேர்காணல்!

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது தேசியப் பேராளர் மாநாடு – ரிஷிகுமாருடன் பிரத்யேக நேர்காணல்!

982
0
SHARE
Ad

MHDMகோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் என்ற அரசு சாரா இயக்கம், தேசிய அளவில் 35 கிளைகளுடன் மலேசியாவிலுள்ள இந்துக்களுக்காகச் சேவையாற்றி வரும் ஒரு அமைப்பாகும். மக்களுக்கு சமயம் சார்ந்த கல்வியை போதிப்பதும், ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதும், சமூக சேவையாற்றுவதும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 34-வது தேசியப் பேராளர் மாநாடு, நாளை சனிக்கிழமை (25 ஜூன்) காலை 11 மணி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (26 ஜூன்) மாலை 4 மணி வரை, நெகிரி செம்பிலான் என்யுபிஇ (NUBE) பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு நாள் மாநாட்டில் 200 பேராளர்களோடு, பார்வையாளர்களும் கலந்து கொள்வார்கள் என மலேசிய இந்துதர்ம மாமன்றம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியப் பொதுச்செயலாளர் திரு.ரிஷிகுமார், மாமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாநாட்டில் நடைபெறவிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்தும் செல்லியலுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியை கீழ்காணும் யூடியூப் காணொளி வழியாகக் காணலாம்.

(குறிப்பு: மலேசியாவில் இந்துக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள் பற்றிய ரிஷிகுமாரின் கருத்துக்கள் அடுத்து வரும் செய்தியில் வெளியாகும்.)