Home Featured நாடு திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றங்களை நஜிப் அறிவிக்கின்றார்!

திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றங்களை நஜிப் அறிவிக்கின்றார்!

644
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – பல அமைச்சர்கள் விலகல், நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் மூலம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு ஆகிய புதிய அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் அமைச்சரவை மாற்றங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் நாளையோ, அல்லது அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையோ, பதவிப் பிரமாணம் எடுப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசிய அரசியல் வட்டாரங்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த அமைச்சரவை மாற்றங்களில் மஇகா அமைச்சர்களும் இடம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.