Home Featured உலகம் யூரோ: ஞாயிற்றுக்கிழமை இரவைக் கலக்கப் போகும் பரபரப்பான 3 ஆட்டங்கள்! ஜெர்மனி, பிரான்ஸ் கால் இறுதிக்கு...

யூரோ: ஞாயிற்றுக்கிழமை இரவைக் கலக்கப் போகும் பரபரப்பான 3 ஆட்டங்கள்! ஜெர்மனி, பிரான்ஸ் கால் இறுதிக்கு முன்னேறுமா?

566
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEசென்னை – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு முக்கியமான, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

இன்று நடைபெறும் ஆட்டங்கள்:

மலேசிய நேரப்படி

பிரான்ஸ் – அயர்லாந்து குடியரசு (இரவு 9.00 மணி)

ஜெர்மனி – சுலோவாக்கியா (இரவு 11.55 மணி)

ஹங்கேரி – பெல்ஜியம் (திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணி)

#TamilSchoolmychoice

முதல் ஆட்டத்தில், பிரான்ஸ் அயர்லாந்து குடியரசைச் சந்திக்கும் வேளையில் இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி சுலோவாக்கியாவுடன் மோதுகின்றது. இந்த இரண்டு நாடுகளும், கால் இறுதிக்கு முன்னேறுமா அல்லது அதிர்ச்சி தரும் வகையில் தோற்கடிக்கப்படுமா என்பதைக் காண உலகம் எங்கும் காற்பந்து இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

euro-26 june-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம் பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு நேரமாகும்.