Home Featured தமிழ் நாடு இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை: புகைப்படக் கருவியில் பதிவான கொலைகாரன் உருவம்!

இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை: புகைப்படக் கருவியில் பதிவான கொலைகாரன் உருவம்!

830
0
SHARE
Ad

Swathi-chennai-girl-murderedசென்னை – நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பயங்கரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட, சுவாதி என்ற இன்போசிஸ் நிறுவன பொறியியலாளர் கொலை வழக்கில், கொலையாளியை காவல் துறையினர் நெருங்கி விட்டதாக நம்பப்படுகின்றது.

அந்த இரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படக் கருவிகளில் கொலையாளியின் உருவம் தெரிந்திருப்பதைத் தொடர்ந்து அவனைத் தேடும் வேட்டையில் சென்னை காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதுகில் கணினிப் பையைப் போன்ற ஒரு பையோடு நடந்து செல்லும் நபர்தான் அந்தக் கொலையாளி என்றும், அந்தப் பையிலிருந்துதான் பட்டாக்கத்தியை வெளியில் எடுத்து கொலையாளி, அந்தப் பயங்கரக் கொலையை அரங்கேற்றினான் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அந்தக் கொலையாளி நபர் இரயில் நிலையத்தில் நடந்து செல்லும் காணொளிக் காட்சிகளை இந்தியத் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.