Home Featured உலகம் யூரோ: போலந்து, வேல்ஸ், போர்ச்சுகல், வெற்றி!

யூரோ: போலந்து, வேல்ஸ், போர்ச்சுகல், வெற்றி!

521
0
SHARE
Ad

euro-poland-switzerland-score

euro-wales-north ireland-score

euro-portugal-croatia-score

#TamilSchoolmychoice

பாரிஸ்: நேற்று சனிக்கிழமை தொடங்கிய ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இரண்டாவது சுற்று ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் போலந்தும் சுவிட்சர்லாந்தும் 1-1 என்ற நிலையில் சமநிலை கண்டன. இதைத் தொடர்ந்து பினால்டிகளின் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நிலைமை ஏற்பட்டது. இதில் 5-4 என்ற கோல் எண்ணிக்கையில் பினால்டி கோல்களின் அடிப்படையில் போலந்து வெற்றி பெற்றது.

வேல்ஸ் – வட அயர்லாந்து

இரண்டாவது ஆட்டத்தில் வேல்ஸ்-வட அயர்லாந்து இரு நாடுகளும் மோதியதில் வேல்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கால் இறுதி ஆட்டங்களுக்கு முன்னேறும் வேல்ஸ் பெல்ஜியம் அல்லது ஹங்கேரி என இரு நாடுகளில் ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திக்கும்.

போர்ச்சுகல் – குரோஷியா

போர்ச்சுகல் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் குரோஷியாவை வென்றதைத் தொடர்ந்து, கால் இறுதி ஆட்டங்களுக்குத் தேர்வு பெற்றுள்ளது.

euro-portugal-ronaldo

குரோஷியாவை வெற்றிகொண்ட களிப்பில் போர்ச்சுகல் நாட்டின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிச் சின்னம் காட்டுகிறார்.