Home Featured உலகம் யூரோ: முதல் பாதி ஆட்டத்தில் அயர்லாந்து 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி!

யூரோ: முதல் பாதி ஆட்டத்தில் அயர்லாந்து 1-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி!

832
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்து உபசரணை நாடு என்ற முறையில், பிரான்ஸ் கிண்ணத்தை வெல்லக் கூடும் அல்லது இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வரும் வேளையில், எதிர்பாராதவிதமாக, அயர்லாந்து குடியரசு குழுவிடம் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் பிரான்ஸ் தற்போது பின்தங்கி உள்ளது.

இன்றைய ஆட்டத்தின் முதல் பாதியில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தங்களுக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பை அயர்லாந்து கோலாக்கிவிட, தற்போது பிரான்ஸ் பின்தங்கி உள்ளது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை என்றால், இரண்டாவது சுற்றிலேயே ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து அந்நாடு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.