Home Featured தமிழ் நாடு இளங்கோவன் பதவி விலகலை சோனியா காந்தி ஏற்றார்!

இளங்கோவன் பதவி விலகலை சோனியா காந்தி ஏற்றார்!

771
0
SHARE
Ad

சென்னை – தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதவி விலகலை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அவரது சகாப்தம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

evks-elangovanபெண்களைப் பற்றி பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் கூறியும், முதல்வர் ஜெயலலிதா குறித்த பல்வேறு தகாத விமர்சனங்களை முன்வைத்தும் பலரது வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்ட இளங்கோவன், இதன் காரணமாக, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளையும் சந்தித்து வருகின்றார்.

தமிழகத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 சட்டமன்ற இடங்களை மட்டுமே பெற்றதைத் தொடர்ந்து இளங்கோவன் தலைமைத்துவ பாணியினால்தான் இத்தகைய மோசமான தோல்வி ஏற்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் இளங்கோவன்.

அவருக்குப் பதிலாக அடுத்த தமிழகக் காங்கிரஸ் தலைவர் யார் என்ற ஆரூடங்களும் தற்போது எழுந்துள்ளன.