Home Featured தமிழ் நாடு தொடர் கொலைகள்: அதிமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு குறித்து கருணாநிதி கேள்வி!

தொடர் கொலைகள்: அதிமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு குறித்து கருணாநிதி கேள்வி!

776
0
SHARE
Ad

karunanidhiசென்னை – நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கின் நிலை குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரை வெளிவந்த அதே நாள் நாளேடுகளில் வந்துள்ள சில செய்திகளைக் கூற வேண்டுமானால், சென்னை கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் வெட்டிக் கொலை; தளி அருகே வீட்டில் 4 பேரைக் கட்டிப் போட்டு 25 பவுன் நகை, 26 ஆயிரம் ரூபாய் கொள்ளை; ராயப்பேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் தாய், 3 மகள்கள் கொடூரக் கொலை; சென்னை நுங்கம்பாக்கம், புகைவண்டி நிலையத்தில் அதிகாலையில் பெண் என்ஜினியர் சுவாதி கொலை; கேளம்பாக்கம் அருகே வாலிபர் ராஜா கழுத்து அறுக்கப்பட்டு கொலை; அம்பத் தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என்று 9 கொலைகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளன.”

“விருதுநகர் மாவட்டத்தில், திருத்தங்கலில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா பத்திரிகை யில் அமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்ப தற்காக அந்தக் கோவில் செயல் அலுவலரை அ.தி.மு.க. வினர் தாக்கி அவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.”

#TamilSchoolmychoice

“24-6-2016 தேதிய “தினமலர்” நாளேட்டில் “கொலையாய் நடக்கிறது; பயமாய் இருக்கிறது – நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கும் கூலிப்படைகள் – நடுக்கத்தோடு வாழும் வட சென்னை மக்கள்” என்ற தலைப்பில் அரை பக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு பற்றித்தான் எழுதியுள்ளது.”

“அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை அமைதிப் பூங்காவாகத் திகழ்வதற்கு இவைதான் அடையாளமா?” என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.