Home Featured நாடு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பழனிவேல் தரப்பு – சங்கப் பதிவக வழக்கு!

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் பழனிவேல் தரப்பு – சங்கப் பதிவக வழக்கு!

942
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தொடர்பில், சங்கப் பதிவக முடிவுகள் குறித்து முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

மஇகா தலைமைத்துவம் தொடர்பில் சங்கப் பதிவகம் மேற்கொண்ட முடிவுகள் சட்டத்துக்குப் புறம்பானவை என பழனிவேல் தரப்பினர் நீதிமன்றத்தில் நடத்தி வரும் போராட்டத்தின் இறுதிக் கட்டமாக இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது.

தனது அணித் தலைவர்களுடன் பழனிவேல் சந்திப்பு

#TamilSchoolmychoice

palanivel-meeting-leaders-umaraniநேற்று நடைபெற்ற தனது அணித் தலைவர்களுடனான சந்திப்பில் பழனிவேலுவுடன் மற்ற தலைவர்கள்…முன்னாள்  மஇகா சிகாம்புட் தொகுதித் தலைவர் டத்தோ ராஜூ உரையாற்றுகின்றார்…

இதற்கிடையில், நேற்று கோலாலம்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் பழனிவேல் தனது அணித் தலைவர்களுடன், சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தனது அணியின் முன்னாள் மஇகா தலைவர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

palanivel-meeting mic leaders

தனது அணித் தலைவர்களுடனான சந்திப்பில் பழனிவேல் உரையாற்றுகின்றார்…

palanivel-faction-leaders-meeting-palanivel

பழனிவேல் அணியினரின் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் ஒரு பிரிவினர்…

தனது ஆதரவாளர்களுடனான சந்திப்பில் பழனிவேல் உரையாற்றி, தனது தரப்பு விளக்கங்களை எடுத்துரைத்தார்.